புதன், 21 ஜனவரி, 2009

மும்பாய் தாக்குதல் ஏர்படுத்திய தாக்கங்கள்

இந்திய அரசு நடவடிக்கைகள்

1) இந்திய ராணுவத்தை எல்லைக்கு அனுப்பியது எதிர் மறை விளைவுகளை எற்படுத்தியிருக்கிற்து.தாலிபான்கள் பாக் ராணுவத்தின் கெடுபிடியிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.

2)ஓர் பொது எதிரி ( இந்தியா) கிடைத்திருப்பதால் எல்லா பாக்கியரும் ( தாலிபான்,ரானுவம்,அரசு,உழவு அமைப்பு,முல்லாக்கள்) ஓரணியில் திரண்டு விட்டனர்.

3)பாக்கிஸ்தான் உளவு அமைப்பின் அதிகாரம் ஓங்கி மேலும் உறுதி படுத்தப்பட்டிருக்கிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாக்கிஸ்தான் உளவு அமைப்பின் மும்பை தாக்குதல் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியிருக்கிறது.

என்ன செயிதிருக்க வேண்டும்?

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் நிலைகள் மேல் கடும் விமான மற்றும் ஏவு கணை தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்.ஏன்?

மும்பை தாக்குதலை நடத்தியது பாக் உளவு அமைப்பு என்பது பெரிய ஊகம் செய்ய வேண்டிய வேலை இல்லை.பாக்கிஸ்தான் உளவு அமைப்பை தண்டிக்க அது உருவாக்கிய தாலிபான்களை தாக்குவதே சரியான பதிலடியாகும்.இதில் பல நன்மைகள் உள்ளன.

எந்த ஒரு தாக்குதலுக்குப் பின்னரும் பதில் தாக்குதல் என்பது கட்டாயமாக செய்ய பட வேண்டியது.இது பின்னாளில் தாக்குதல் தொடுக்க நினைப்பவர்களை கட்டாயம் இரு முறை யோஸிக்க வைக்கும்.ஆனால் தாக்குதலுக்கு ஆளாபவர்கள் நம்மை பெரிய அளவு திருப்பி தாக்காதவர்களாக இருக்க வேண்டும்.உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அது என்றும் தனது சம எதிரியான ரஷ்யாவை நேரடியாக தாக்கியது இல்லை.மறை முக யுத்தம்தான். ஆனால் இராக் மற்றும் யுகோஸ்லேவியா என்றால் நேரடி தாக்குதல்தான்.ஏன் என்றால் பேரழிவு இரு பக்கமும் ஏற்படும் என்றால் எந்த புத்திசாலி ராணுவமும் போர் தொடங்க தயங்கும்.வெற்றி உறுதி படுத்தப்படாத மற்றும் இலக்கில்லாத யுத்தத்தால் எந்த பயனும் இல்லை.

மாறாக ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் மேல் நடத்தும் தாக்குதல்கள் நமது ராணுவ நோக்கங்களை ( ஆப்கானிஸ்தானில்) அடைய உதவுவதோடு மட்டுமல்லாமல் நமது ராணுவ மற்றும் விமான படையினருக்கு தாக்குதல் பயிற்சி களமாக அமையும்.( நமது ராணுவ மற்றும் விமான படையினர் கடைசியாக எப்போது யாருக்கு எதிராகவும் தாக்குதலில் ஈடு பட்டிருப்பார்கள் என்று யாராவது நினைவு கூற முடியுமா? ) உண்மையான போரில் ரொம்ப நாட்கள் ஈடு படாத ராணுவம் துரு பிடித்த வாளுக்கு சமம்.

ஆப்கானிஸ்தானின் மீதான தாக்குதல் சில வருடங்களுக்கு முன்னமே நடத்தப் பட்டிருக்க வேண்டும். நமது விமானம் கடத்தப் பட்டு விடுவிக்கப் பட்டது நினைவிருக்கலாம்.அதை மீட்க அமைச்சரே காபூல் சென்றார்.( அந்த விமானம் அமிர்தஸரஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்ப அனுமதித்ததே பெரிய தவறு, அது வேறு விஷ‌யம்.)நம் விமானம் காபூலில் இருந்து கிளம்பி பத்திரமான தொலைவு கடந்தவுடன் நம் விமான படை விமானங்கள் காபூல் விமான தளம் மீது கடும் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்.தாக்குதல் இலக்கு விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதிகள் மற்றும் விமான ஓடு பாதையாக இருந்திருக்க வேண்டும்.ஒரு துல்லியமான தாக்குதலுக்கு திட்டமிடல் மற்றும் செயல் படுத்தல் பயிற்சி கிட்டியிருப்பதோடு இந்திய விமான கடத்தல் காரர்களுக்கு உதவி செய்பவர்க்ளுக்கு என்ன மாதிரி பதில் கிடைக்கும் என்பதையும் அதிகம் பேசாமல் செயலில் காட்டியிருக்கலாம்.உறுதியான அரசியல் தலைமையினால் மட்டுமே இதை செய்ய முடியும். ( புட்டின் மாதிரி)

பாராளுமன்ற தாக்குதலுக்குப் பின் வாஜ்பாய் அரசும் இதே தவறை செய்தது. ஆனாலும் பெரிதாக எதையும் சாதிக்க முடிய வில்லை.அப்போதே இம்மாதிரியான தாக்குதல்கள் மீன்டும் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற வியூகம் செயிதிருக்க வேண்டும்.

ஆனால் முந்தைய வாஜ்பாய் அரசு பாராளுமன்ற தாக்குதலுக்குப் பின் செய்த அதே மாதிரிதான் இந்த அரசு மும்பை தாக்குதலுக்கு பின் செய்வது வியூகம் எதுவும் இல்லை என்பதையே காட்டுகிறது. (பிரஜேஷ் மிஷ்ராவின் ஓய்யூதியத்தை நிறுத்த வேண்டும் மற்றும் M.K. நாராயணனை வீட்டுக்கு அனுப்பிருக்க வேண்டும்.)

மற்றொரு வேடிக்கை குற்றவாளிகளை ஒப்படைக்க கோருவது.

இந்தியா ஏற்கனவே குற்றவாளிகளால் நிரம்பிய நாடு. இருக்கிற குற்றவாளிகளையே தண்டிக்க முடிய வில்லை. அவ்வளவு சட்ட ஓட்டைகள்.அப்படியே பாக்கிஸ்தான் குற்றவாளிகளை ஒப்படைக்கிறது என்று வைத்தாலும் அவர்களை நம் சட்டத்தினால் தண்டிக்க முடியுமா? கொஞ்ச நாளிலேயே அவர்கள் விடுதலையாகி தேர்தலில் நின்று ....... இந்தியாவில் இ்து சாத்தியமே இல்லை என்று சொல்ல முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக