ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

விடுதலை புலிகளின் தோல்விக்கு என்ன காரணம்?

ராணுவ ரீதியாக பெரும் தோல்விகளை புலிகள் சந்தித்து வருவது ஏன் என்று அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இப்போது நடை பெறும் யுத்தம்,பெரிய இடைவெளிக்கு அப்புறம் நிகழ்வது.சாதாரணமாக புலிகள் சண்டை இடைவெளியில் ஆயுதம் வாங்குவது,ஆள் சேர்ப்பது என தங்களை பல படுத்தி கொள்வர். இந்த முறையும் அதை செய்தார்கள்.ஆனால் தங்களின் அடிப்படை போர் யுக்தியையே மாற்றி,மாற்று போர் முறைக்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதிலும் அதற்கான திட்டமிடுதலிலும் தங்கள் கவனத்தை செலவிட்டார்கள்.தங்களின் எதிரியான் இலங்கை ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்கவும் அதனை தாக்கி பின் வாங்கவும் செய்ய வேண்டிய ஆயுதங்களை (குறிப்பாக இலகு ரக நீண்ட தொலைவு தாக்கும் பீரங்கிகள்,டாங்கிகள், நடமாடும் ராக்கெட் லாஞ்சர்கள்,விமான எதிர்ப்பு பீரங்கிகள்,ஏவு கணைகள் மற்றும் அதி நவீன படகுகள்) குவிப்பதற்கு பதில் விளம்பரத்தை தவிர வேறு எந்த வகையிலும் பெரிதாக பயன் படாத விமான படையை உருவாக்குவதில் தங்கள் சக்தியை ( நேரம், பணம் ,மனித பலம் ) செலவிட்டார்கள். முக்கியமாக விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ஏவு கணைகளில் புலிகள் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இது இலங்கை தரைபடையினருக்கு பெரிதும் உதவிகரமாயிருந்த விமான தாக்குதல்களை சமாளிக்க / முறியடிக்க‌ உதவியிருக்கும். மேலும் நல்ல கட்டுமான பின்னணியை விமான படைக்கு அமைப்ப்தற்கு பதில்,சொற்ப விளம்பரம் தரும் தாக்குதல்களில் கவனத்தை செலவிட்டனர். மேலும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் காட்டாமல்,இந்தியாவை எரிச்சலடைய மற்றும் அச்சுறுத்தும் மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடு பட்டார்கள்.
மாறாக இலங்கை ராணுவம் இந்தியாவுடன் உறவை பல படுத்தியதோடு,புலிகளை தரை வழியாக எதிர் கொள்ள சரியான ஆயுதங்களை ( முன்னர் நடந்த சண்டைகளிலிருந்து பாடம் கற்று கொண்டது ) வாங்கி குவித்தது.
முன்பு நடந்த சண்டைகளில்,இரு முனை தாக்குதல்களை வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து தொடுத்த புலிகள் இம்முறை வடக்கில் மட்டுமே தங்கள் படைகளை கொண்டிருந்தனர். இது புலிகளின் கொரில்லா முறை போர் யுக்தியை முழுவதுமாக மழுங்கடித்து விட்டது.இது இலங்கை அரசு மற்றும் கருணாவுக்கு இடையிலான ஒப்பந்தத்தால் இலங்கை அரசுக்கு சாத்தியமானது.
புலிகள் முன்பு பெற்ற வெற்றிகள் இந்தியாவின் உதவி இல்லாமல் பெற்றிருக்க முடியுமா?
புலிகள் இனிமேலும் இந்திய உதவி இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமா?
ஏன் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த புலிகள் முயற்சி செய்ய வில்லை?
கிழக்கில் தங்களது படைகளே இல்லாத நிலையில்,போருக்கு தயாராக தாங்கள் இருக்கிறோம் என புலிகள் எண்ணியது சரியா?
இந்த கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.ஏனெனில் புலிகளின் தற்போதைய நிலமைக்கும் இந்த கேள்விகளுக்கான விடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தவறான ராணுவ யுக்திகளும்,உட்பூசலால் பலமிழந்த அமைப்பு போருக்கு தயாராக இருப்பதான‌ தவறான கணிப்புமே புலிகளின் ராணுவ ரீதியிலான தோல்விக்கு முக்கிய காரணங்கள்.

தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தில் அரசியல் தலையீடு தவிர்க்க பட வேண்டும்

இன்றைய ஹிந்து நாழிதழ் புதிய கட்சி தொடக்கம் என்று வெளியிட்டுள்ள செய்தியில் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் மானில உரிமைகளில் தலையிடுவதாக அக்கட்சியினர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு குடி மகனின் பாதுகாப்பு என்ற அடிப்படை உரிமையே ஆபத்திலிருக்கும் போது மானில உரிமை என்பது அர்த்தமற்றதாகிறது என்ற உண்மையை அக்கட்சியினர் மட்டுமல்ல அனைத்து கட்சியினரும் மற்றும் அனைத்து மானில அரசுகளும் உணர வேண்டும்.
மானிலங்களுக்கு இடையேயான தேசபாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பு போதுமான அளவு இல்லை என உணரப் பட்டதால்தான் இந்த சட்டம் அவசியமாயிற்று என்பதை அனைவரும் புரிந்து கொண்டு இதை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும்.

சனி, 7 பிப்ரவரி, 2009

அமெரிக்கர்களின் தொலை நோக்குப்பார்வை

ஆப்கானிஸ்தானில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,இப்போது அமெரிக்கர்கள் செய்யும் அதே (தீவிர மதவாதிகளை கட்டுபடுத்தும்) வேலையை சோவியத் யூனியன் செய்து வந்தது.ஆனால் அமெரிக்க புத்தி சாலிகள் பெரும் பணத்தை செலவு செய்து சோவியத் யூனியனை விரட்டி விட்டு அந்த வேலையை தாங்கள் எடுத்து கொண்டார்கள். இப்போது செமத்தியாக உதை வாங்கி அந்த வேலையை அரையும் குறையுமாக செய்து வருகிறார்கள்.
ஒரு புதிய செய்தி என்னவென்றால், சமீபத்தில் தாலிபான்கள் அமெரிக்க படையினருக்கு, பொருட்கள் எடுத்து செல்லும் பாலத்தை தகர்த்தனர். அதனால்,அமெரிக்க வேண்டு கோளின் படி தனது ஆப்கன் பாதையில் அமெரிக்க படையினருக்கு, பொருட்கள் எடுத்து செல்லும் அனுமதியை ரஷ்யா தந்திருக்கிற்து. ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் தீவிர வாதிகளை கட்டுக்குள் வைத்திருப்பது,தனது எல்லை புற பிரதேசங்களில்,அனுகூலமான சூழ் நிலைக்கு உதவி செய்யும் என ரஷ்யா நினைக்கிறது.
இரண்டாவது,இராக்.
சதாம் செய்த அதே வேலையை அமெரிக்கா இப்போது இராக்கில் செய்து வருகிறது.நிறைய குறைகள் இருந்தாலும்,இராக்கில் மத தீவிரவாதிகளின் ஆதிக்கம் சதாம் காலத்தில் குறைவுதான். முல்லாக்களை அவர் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். அவரை ஆளுமை செய்வதை விட்டு விட்டு அவரை அகற்றியதன் மூலம்,அந்த வேலை இவர்கள் தலையில் விழ,இப்போது உதை வாங்கி , முழி பிதுங்கி அதே வேலையை செய்து வருகிறார்கள்.
இதிலிருந்து நாம் பாடம் கற்று கொள்ள வேண்டும். நம் நாட்டு நகர்புற படித்த மேல் தட்டு வர்க்கம் அமெரிக்கர்கள் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வைத்திருப்பதாய் மன பூர்வமாக நம்புகிறது. நிறைய அமெரிக்க தீர்வுகள் அரைகுறை மேதாவிதனமாகவும்,தொலை நோக்குபார்வை குறைவாகவும் இருக்கின்றன.

இதனால் அமெரிகக் தீர்வுகளை,அலசி ஆராய்ந்து நமக்கேற்ற முறையில் மாற்றி அமைத்து உபயோகிப்ப்துதான் நல்லது.