ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009
விடுதலை புலிகளின் தோல்விக்கு என்ன காரணம்?
இப்போது நடை பெறும் யுத்தம்,பெரிய இடைவெளிக்கு அப்புறம் நிகழ்வது.சாதாரணமாக புலிகள் சண்டை இடைவெளியில் ஆயுதம் வாங்குவது,ஆள் சேர்ப்பது என தங்களை பல படுத்தி கொள்வர். இந்த முறையும் அதை செய்தார்கள்.ஆனால் தங்களின் அடிப்படை போர் யுக்தியையே மாற்றி,மாற்று போர் முறைக்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதிலும் அதற்கான திட்டமிடுதலிலும் தங்கள் கவனத்தை செலவிட்டார்கள்.தங்களின் எதிரியான் இலங்கை ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்கவும் அதனை தாக்கி பின் வாங்கவும் செய்ய வேண்டிய ஆயுதங்களை (குறிப்பாக இலகு ரக நீண்ட தொலைவு தாக்கும் பீரங்கிகள்,டாங்கிகள், நடமாடும் ராக்கெட் லாஞ்சர்கள்,விமான எதிர்ப்பு பீரங்கிகள்,ஏவு கணைகள் மற்றும் அதி நவீன படகுகள்) குவிப்பதற்கு பதில் விளம்பரத்தை தவிர வேறு எந்த வகையிலும் பெரிதாக பயன் படாத விமான படையை உருவாக்குவதில் தங்கள் சக்தியை ( நேரம், பணம் ,மனித பலம் ) செலவிட்டார்கள். முக்கியமாக விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ஏவு கணைகளில் புலிகள் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இது இலங்கை தரைபடையினருக்கு பெரிதும் உதவிகரமாயிருந்த விமான தாக்குதல்களை சமாளிக்க / முறியடிக்க உதவியிருக்கும். மேலும் நல்ல கட்டுமான பின்னணியை விமான படைக்கு அமைப்ப்தற்கு பதில்,சொற்ப விளம்பரம் தரும் தாக்குதல்களில் கவனத்தை செலவிட்டனர். மேலும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் காட்டாமல்,இந்தியாவை எரிச்சலடைய மற்றும் அச்சுறுத்தும் மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடு பட்டார்கள்.
மாறாக இலங்கை ராணுவம் இந்தியாவுடன் உறவை பல படுத்தியதோடு,புலிகளை தரை வழியாக எதிர் கொள்ள சரியான ஆயுதங்களை ( முன்னர் நடந்த சண்டைகளிலிருந்து பாடம் கற்று கொண்டது ) வாங்கி குவித்தது.
முன்பு நடந்த சண்டைகளில்,இரு முனை தாக்குதல்களை வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து தொடுத்த புலிகள் இம்முறை வடக்கில் மட்டுமே தங்கள் படைகளை கொண்டிருந்தனர். இது புலிகளின் கொரில்லா முறை போர் யுக்தியை முழுவதுமாக மழுங்கடித்து விட்டது.இது இலங்கை அரசு மற்றும் கருணாவுக்கு இடையிலான ஒப்பந்தத்தால் இலங்கை அரசுக்கு சாத்தியமானது.
புலிகள் முன்பு பெற்ற வெற்றிகள் இந்தியாவின் உதவி இல்லாமல் பெற்றிருக்க முடியுமா?
புலிகள் இனிமேலும் இந்திய உதவி இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமா?
ஏன் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த புலிகள் முயற்சி செய்ய வில்லை?
கிழக்கில் தங்களது படைகளே இல்லாத நிலையில்,போருக்கு தயாராக தாங்கள் இருக்கிறோம் என புலிகள் எண்ணியது சரியா?
இந்த கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.ஏனெனில் புலிகளின் தற்போதைய நிலமைக்கும் இந்த கேள்விகளுக்கான விடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தவறான ராணுவ யுக்திகளும்,உட்பூசலால் பலமிழந்த அமைப்பு போருக்கு தயாராக இருப்பதான தவறான கணிப்புமே புலிகளின் ராணுவ ரீதியிலான தோல்விக்கு முக்கிய காரணங்கள்.
தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தில் அரசியல் தலையீடு தவிர்க்க பட வேண்டும்
மானிலங்களுக்கு இடையேயான தேசபாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பு போதுமான அளவு இல்லை என உணரப் பட்டதால்தான் இந்த சட்டம் அவசியமாயிற்று என்பதை அனைவரும் புரிந்து கொண்டு இதை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும்.
சனி, 7 பிப்ரவரி, 2009
அமெரிக்கர்களின் தொலை நோக்குப்பார்வை
ஒரு புதிய செய்தி என்னவென்றால், சமீபத்தில் தாலிபான்கள் அமெரிக்க படையினருக்கு, பொருட்கள் எடுத்து செல்லும் பாலத்தை தகர்த்தனர். அதனால்,அமெரிக்க வேண்டு கோளின் படி தனது ஆப்கன் பாதையில் அமெரிக்க படையினருக்கு, பொருட்கள் எடுத்து செல்லும் அனுமதியை ரஷ்யா தந்திருக்கிற்து. ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் தீவிர வாதிகளை கட்டுக்குள் வைத்திருப்பது,தனது எல்லை புற பிரதேசங்களில்,அனுகூலமான சூழ் நிலைக்கு உதவி செய்யும் என ரஷ்யா நினைக்கிறது.
இரண்டாவது,இராக்.
சதாம் செய்த அதே வேலையை அமெரிக்கா இப்போது இராக்கில் செய்து வருகிறது.நிறைய குறைகள் இருந்தாலும்,இராக்கில் மத தீவிரவாதிகளின் ஆதிக்கம் சதாம் காலத்தில் குறைவுதான். முல்லாக்களை அவர் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். அவரை ஆளுமை செய்வதை விட்டு விட்டு அவரை அகற்றியதன் மூலம்,அந்த வேலை இவர்கள் தலையில் விழ,இப்போது உதை வாங்கி , முழி பிதுங்கி அதே வேலையை செய்து வருகிறார்கள்.
இதிலிருந்து நாம் பாடம் கற்று கொள்ள வேண்டும். நம் நாட்டு நகர்புற படித்த மேல் தட்டு வர்க்கம் அமெரிக்கர்கள் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வைத்திருப்பதாய் மன பூர்வமாக நம்புகிறது. நிறைய அமெரிக்க தீர்வுகள் அரைகுறை மேதாவிதனமாகவும்,தொலை நோக்குபார்வை குறைவாகவும் இருக்கின்றன.
இதனால் அமெரிகக் தீர்வுகளை,அலசி ஆராய்ந்து நமக்கேற்ற முறையில் மாற்றி அமைத்து உபயோகிப்ப்துதான் நல்லது.
புதன், 21 ஜனவரி, 2009
மும்பாய் தாக்குதல் ஏர்படுத்திய தாக்கங்கள்
இந்திய அரசு நடவடிக்கைகள்
1) இந்திய ராணுவத்தை எல்லைக்கு அனுப்பியது எதிர் மறை விளைவுகளை எற்படுத்தியிருக்கிற்து.தாலிபான்கள் பாக் ராணுவத்தின் கெடுபிடியிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.
2)ஓர் பொது எதிரி ( இந்தியா) கிடைத்திருப்பதால் எல்லா பாக்கியரும் ( தாலிபான்,ரானுவம்,அரசு,உழவு அமைப்பு,முல்லாக்கள்) ஓரணியில் திரண்டு விட்டனர்.
3)பாக்கிஸ்தான் உளவு அமைப்பின் அதிகாரம் ஓங்கி மேலும் உறுதி படுத்தப்பட்டிருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாக்கிஸ்தான் உளவு அமைப்பின் மும்பை தாக்குதல் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியிருக்கிறது.
என்ன செயிதிருக்க வேண்டும்?
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் நிலைகள் மேல் கடும் விமான மற்றும் ஏவு கணை தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்.ஏன்?
மும்பை தாக்குதலை நடத்தியது பாக் உளவு அமைப்பு என்பது பெரிய ஊகம் செய்ய வேண்டிய வேலை இல்லை.பாக்கிஸ்தான் உளவு அமைப்பை தண்டிக்க அது உருவாக்கிய தாலிபான்களை தாக்குவதே சரியான பதிலடியாகும்.இதில் பல நன்மைகள் உள்ளன.
எந்த ஒரு தாக்குதலுக்குப் பின்னரும் பதில் தாக்குதல் என்பது கட்டாயமாக செய்ய பட வேண்டியது.இது பின்னாளில் தாக்குதல் தொடுக்க நினைப்பவர்களை கட்டாயம் இரு முறை யோஸிக்க வைக்கும்.ஆனால் தாக்குதலுக்கு ஆளாபவர்கள் நம்மை பெரிய அளவு திருப்பி தாக்காதவர்களாக இருக்க வேண்டும்.உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அது என்றும் தனது சம எதிரியான ரஷ்யாவை நேரடியாக தாக்கியது இல்லை.மறை முக யுத்தம்தான். ஆனால் இராக் மற்றும் யுகோஸ்லேவியா என்றால் நேரடி தாக்குதல்தான்.ஏன் என்றால் பேரழிவு இரு பக்கமும் ஏற்படும் என்றால் எந்த புத்திசாலி ராணுவமும் போர் தொடங்க தயங்கும்.வெற்றி உறுதி படுத்தப்படாத மற்றும் இலக்கில்லாத யுத்தத்தால் எந்த பயனும் இல்லை.
மாறாக ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் மேல் நடத்தும் தாக்குதல்கள் நமது ராணுவ நோக்கங்களை ( ஆப்கானிஸ்தானில்) அடைய உதவுவதோடு மட்டுமல்லாமல் நமது ராணுவ மற்றும் விமான படையினருக்கு தாக்குதல் பயிற்சி களமாக அமையும்.( நமது ராணுவ மற்றும் விமான படையினர் கடைசியாக எப்போது யாருக்கு எதிராகவும் தாக்குதலில் ஈடு பட்டிருப்பார்கள் என்று யாராவது நினைவு கூற முடியுமா? ) உண்மையான போரில் ரொம்ப நாட்கள் ஈடு படாத ராணுவம் துரு பிடித்த வாளுக்கு சமம்.
ஆப்கானிஸ்தானின் மீதான தாக்குதல் சில வருடங்களுக்கு முன்னமே நடத்தப் பட்டிருக்க வேண்டும். நமது விமானம் கடத்தப் பட்டு விடுவிக்கப் பட்டது நினைவிருக்கலாம்.அதை மீட்க அமைச்சரே காபூல் சென்றார்.( அந்த விமானம் அமிர்தஸரஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்ப அனுமதித்ததே பெரிய தவறு, அது வேறு விஷயம்.)நம் விமானம் காபூலில் இருந்து கிளம்பி பத்திரமான தொலைவு கடந்தவுடன் நம் விமான படை விமானங்கள் காபூல் விமான தளம் மீது கடும் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்.தாக்குதல் இலக்கு விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதிகள் மற்றும் விமான ஓடு பாதையாக இருந்திருக்க வேண்டும்.ஒரு துல்லியமான தாக்குதலுக்கு திட்டமிடல் மற்றும் செயல் படுத்தல் பயிற்சி கிட்டியிருப்பதோடு இந்திய விமான கடத்தல் காரர்களுக்கு உதவி செய்பவர்க்ளுக்கு என்ன மாதிரி பதில் கிடைக்கும் என்பதையும் அதிகம் பேசாமல் செயலில் காட்டியிருக்கலாம்.உறுதியான அரசியல் தலைமையினால் மட்டுமே இதை செய்ய முடியும். ( புட்டின் மாதிரி)
பாராளுமன்ற தாக்குதலுக்குப் பின் வாஜ்பாய் அரசும் இதே தவறை செய்தது. ஆனாலும் பெரிதாக எதையும் சாதிக்க முடிய வில்லை.அப்போதே இம்மாதிரியான தாக்குதல்கள் மீன்டும் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற வியூகம் செயிதிருக்க வேண்டும்.
ஆனால் முந்தைய வாஜ்பாய் அரசு பாராளுமன்ற தாக்குதலுக்குப் பின் செய்த அதே மாதிரிதான் இந்த அரசு மும்பை தாக்குதலுக்கு பின் செய்வது வியூகம் எதுவும் இல்லை என்பதையே காட்டுகிறது. (பிரஜேஷ் மிஷ்ராவின் ஓய்யூதியத்தை நிறுத்த வேண்டும் மற்றும் M.K. நாராயணனை வீட்டுக்கு அனுப்பிருக்க வேண்டும்.)
மற்றொரு வேடிக்கை குற்றவாளிகளை ஒப்படைக்க கோருவது.
இந்தியா ஏற்கனவே குற்றவாளிகளால் நிரம்பிய நாடு. இருக்கிற குற்றவாளிகளையே தண்டிக்க முடிய வில்லை. அவ்வளவு சட்ட ஓட்டைகள்.அப்படியே பாக்கிஸ்தான் குற்றவாளிகளை ஒப்படைக்கிறது என்று வைத்தாலும் அவர்களை நம் சட்டத்தினால் தண்டிக்க முடியுமா? கொஞ்ச நாளிலேயே அவர்கள் விடுதலையாகி தேர்தலில் நின்று ....... இந்தியாவில் இ்து சாத்தியமே இல்லை என்று சொல்ல முடியாது.