ராணுவ ரீதியாக பெரும் தோல்விகளை புலிகள் சந்தித்து வருவது ஏன் என்று அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இப்போது நடை பெறும் யுத்தம்,பெரிய இடைவெளிக்கு அப்புறம் நிகழ்வது.சாதாரணமாக புலிகள் சண்டை இடைவெளியில் ஆயுதம் வாங்குவது,ஆள் சேர்ப்பது என தங்களை பல படுத்தி கொள்வர். இந்த முறையும் அதை செய்தார்கள்.ஆனால் தங்களின் அடிப்படை போர் யுக்தியையே மாற்றி,மாற்று போர் முறைக்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதிலும் அதற்கான திட்டமிடுதலிலும் தங்கள் கவனத்தை செலவிட்டார்கள்.தங்களின் எதிரியான் இலங்கை ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்கவும் அதனை தாக்கி பின் வாங்கவும் செய்ய வேண்டிய ஆயுதங்களை (குறிப்பாக இலகு ரக நீண்ட தொலைவு தாக்கும் பீரங்கிகள்,டாங்கிகள், நடமாடும் ராக்கெட் லாஞ்சர்கள்,விமான எதிர்ப்பு பீரங்கிகள்,ஏவு கணைகள் மற்றும் அதி நவீன படகுகள்) குவிப்பதற்கு பதில் விளம்பரத்தை தவிர வேறு எந்த வகையிலும் பெரிதாக பயன் படாத விமான படையை உருவாக்குவதில் தங்கள் சக்தியை ( நேரம், பணம் ,மனித பலம் ) செலவிட்டார்கள். முக்கியமாக விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ஏவு கணைகளில் புலிகள் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இது இலங்கை தரைபடையினருக்கு பெரிதும் உதவிகரமாயிருந்த விமான தாக்குதல்களை சமாளிக்க / முறியடிக்க உதவியிருக்கும். மேலும் நல்ல கட்டுமான பின்னணியை விமான படைக்கு அமைப்ப்தற்கு பதில்,சொற்ப விளம்பரம் தரும் தாக்குதல்களில் கவனத்தை செலவிட்டனர். மேலும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் காட்டாமல்,இந்தியாவை எரிச்சலடைய மற்றும் அச்சுறுத்தும் மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடு பட்டார்கள்.
மாறாக இலங்கை ராணுவம் இந்தியாவுடன் உறவை பல படுத்தியதோடு,புலிகளை தரை வழியாக எதிர் கொள்ள சரியான ஆயுதங்களை ( முன்னர் நடந்த சண்டைகளிலிருந்து பாடம் கற்று கொண்டது ) வாங்கி குவித்தது.
முன்பு நடந்த சண்டைகளில்,இரு முனை தாக்குதல்களை வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து தொடுத்த புலிகள் இம்முறை வடக்கில் மட்டுமே தங்கள் படைகளை கொண்டிருந்தனர். இது புலிகளின் கொரில்லா முறை போர் யுக்தியை முழுவதுமாக மழுங்கடித்து விட்டது.இது இலங்கை அரசு மற்றும் கருணாவுக்கு இடையிலான ஒப்பந்தத்தால் இலங்கை அரசுக்கு சாத்தியமானது.
புலிகள் முன்பு பெற்ற வெற்றிகள் இந்தியாவின் உதவி இல்லாமல் பெற்றிருக்க முடியுமா?
புலிகள் இனிமேலும் இந்திய உதவி இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமா?
ஏன் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த புலிகள் முயற்சி செய்ய வில்லை?
கிழக்கில் தங்களது படைகளே இல்லாத நிலையில்,போருக்கு தயாராக தாங்கள் இருக்கிறோம் என புலிகள் எண்ணியது சரியா?
இந்த கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.ஏனெனில் புலிகளின் தற்போதைய நிலமைக்கும் இந்த கேள்விகளுக்கான விடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தவறான ராணுவ யுக்திகளும்,உட்பூசலால் பலமிழந்த அமைப்பு போருக்கு தயாராக இருப்பதான தவறான கணிப்புமே புலிகளின் ராணுவ ரீதியிலான தோல்விக்கு முக்கிய காரணங்கள்.
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in